Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 நவம்பர் (ஹி.ச.)
சென்னை குன்றத்தூர் பஸ் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பிளேடு மற்றும் இரும்பு கம்பியை எடுத்து கழுத்தை கர, கரவென அறுத்துக் கொண்டார்.
இதில் கழுத்தில் இருந்து ரத்தம் அதிக அளவில் கொட்டியது இதனை கண்டதும் அங்கிருந்த பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதைதடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த ரத்த வெள்ளத்தில் நின்று கொண்டிருந்த வாலிபருடன் விசாரணை மேற்கொண்ட போது போலீசாரையே மிரட்டும் தோணியிலும் தனது அம்மா வரவில்லை என்றால் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை மிரட்டினார்.
மேலும் சிகிச்சைக்காக போலீசார் அழைத்த போது வராமல் அடம் பிடித்தார் நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் அந்த நபரை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
போலீசார் விசாரணையில் அந்த நபரின் பெயர் ஆகாஷ் என்பதும் அவரது தாய் குன்றத்தூர் பஸ் நிலையத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருவதாகவும் அவர் வெளியூர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது தாய் வரவில்லை என்றால் அந்த ஆத்திரத்தில் கழுத்தை அறுத்துக் கொண்டதும் தாய் வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியதும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / Durai.J