Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 6 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் 85 வது வார்டுக்கு உட்பட்ட குறிச்சி வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் சிதம்பரம். சமூக ஆர்வலரும், திமுக கழக மூத்த முன்னோடியுமான இவர் அதே பகுதியில் தனது பூர்வீக இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
இந்த பகுதியில் முறையாக பாதாள சாக்கடை திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் அமுல் படுத்தாமல் கடந்த 10 ஆண்டுகளாகவே இவரது சொந்த இடத்தில் பாதாள சாக்கடை வழித்தடத்தை கட்டி நீரை வெளியேற்றி வருகிறது.
காலி இடமாக இருந்த போதில் இருந்தே இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்தும் இது வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.
இன்று, நாளை என காலம் தாழ்த்தி வரும் நிலையில், தற்போது அந்த பகுதியில் வீடு கட்டி வருகின்றார். வீட்டின் படுக்கையறை வழியாக சாக்கடை நீர் செல்வதால், தனது சொந்த நிலத்தின் வழியாக பாதாள சாக்கடை வெளியேறுவதை தடுத்து நிறுத்தி அதனை பொது வழிதடத்தில், பாதாள சாக்கடை வாய்க்கால் கட்டி நீரை வெளியேற்ற கோரி பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.
மாநகராட்சி ஆணையர், மாநகர மேயர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு செய்து வீட்டு உரிமையாளரிடம் உடனடியாக இதனை சரிசெய்து தருவதாக கூறி செல்கின்றனர். மேலும் ஒரு வாரத்தில் உங்கள் பட்டா பூமிக்குள் பொது சாக்கடை நீர் வராத வண்ணம் பாதாள சாக்கடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கூறி செல்கின்றனர்.
ஆனால் அதிகாரிகளின் செயல் பாடுகள் வெறும் வாய் வார்த்தையில் மட்டும் தான் உள்ளது, நடவடிக்கை எடுக்க யாரும் முன்வருவதில்லை என மன வருத்தத்துடன் கூறுகின்றார் சிதம்பரம், தனது வீட்டிற்க்கு அருகில் பாதாள சாக்கடை நீர் செல்ல மாநகராட்சி நிர்வாகத்தால் 12 லட்சம் திட்ட மதிப்பீடு செய்து பாதாள சாக்கடை திட்டத்திற்கு, பணிகள் நடைபெற்றது ஆனால் அதில் நீர் செல்லாமல் அந்த பகுதி மணல் போட்டு அடைக்க பட்டுள்ளது. உடனடியாக அந்த திட்டத்தை அமுல் படுத்த வேண்டும் என்றார்.
தொடந்து, இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவரது வீட்டின் அருகில் வசிக்கும், கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி குறிச்சி பிரான்சிஸ் கூறியதாவது.....
இவரது வீட்டில் படுக்கையறை வழியாக சாக்கடை நீர் செல்கின்றது. மழை காலங்களில் அதிகஅளவில் பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடை நீரில் அடித்து வந்தால் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு இவரது வீட்டிற்குள் 5 அடி உயரத்திற்கு சாக்கடை நீர் தேங்கி வாசல் வழியாக இந்த பகுதி முழுவதும் வெளியேறி விடுகின்றது, அரசுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, நில வரி, காலியிட மனை வரி, தண்ணீர் வரி, மின்சார இணைப்பு, என அனைத்திற்க்கும் லட்ச கணக்கில் வசூல் செய்யும் நிர்வாகம், அவர்களின் தவறை உணர்ந்து சாக்கடையை சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எந்த வித அடிப்படை வசதிகளும் இது வரை இந்த பகுதிக்கு மாநகராட்சி நிர்வாகம் இது வரை ஏற்படுத்தி தர வில்லை இது மேலும் எங்களை வேதனையில் ஆழ்த்தி வருகின்றது.
முறையாக அதிகாரிகள் இதனை சீரமைக்க வில்லை என்றால் மாவட்ட, மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளதாக மனம் நொந்த படி தெரிவித்தார். இனியும் இறங்கி வருமா மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் என காத்திருந்து வருவதாக கனத்த இதயத்துடன் கேட்டு கொண்டதுடன், இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக, அகற்றி சாக்கடை நீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் கேட்டு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / V.srini Vasan