திருப்பத்தூர் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை - வனத்துறை அறிவிப்பு
திருப்பத்தூர், 6 நவம்பர் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலை அடிவாரத்தில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. மேலும் இங்கு பிரசித்திபெற்ற வெற்றிவேல் முருகன் ஆலயம் உள்ளது. சுற்றுலாத்தலமான இந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு வெளி மாநிலங்க
திருப்பத்தூர் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை - வனத்துறை அறிவிப்பு


திருப்பத்தூர், 6 நவம்பர் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலை அடிவாரத்தில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. மேலும் இங்கு பிரசித்திபெற்ற வெற்றிவேல் முருகன் ஆலயம் உள்ளது.

சுற்றுலாத்தலமான இந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்து மற்றும் உள்ளூர் வாசிகள் என தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு முருகன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

மேலும் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் சுற்றுலா பயணிகளுக்காக உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறுவர்களின் பொழுது போக்கிற்காக தமிழக அரசின் சிறுவர் பூங்கா உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று

(நவ 06) கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் அங்கு வரக்கூடிய பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும் அத்துமீறி வனத்திற்குள் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b