Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 நவம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 தேதி முதல் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மை பணியாளர்கள் நேற்று (05.11.2025) மெரினா கடற்கரையில் உள்ள கடலில் இறங்கி தூய்மை பணிகளை தனியார்மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உரிய அனுமதியின்றி கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதாகக் கூறி தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பணி நிரந்தரம் செய்ய கோரி மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் 83 பேர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது 51 பெண் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 83 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b