யூ டர்ன் அடித்த தங்கம் விலை - சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்தது!
சென்னை, 6 நவம்பர் (ஹி.ச) சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் அக்டோபர் 17ம் தேதி உச்சகட்டமாக ஒரு சவரன் தங்கம் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்பட்டது. தீபாவளிக்கு பின் தங்கம் விலை சற்றே குறைந்துள
Gold and silver


சென்னை, 6 நவம்பர் (ஹி.ச)

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் அக்டோபர் 17ம் தேதி உச்சகட்டமாக ஒரு சவரன் தங்கம் ரூ.97,600க்கு விற்பனை செய்யப்பட்டது. தீபாவளிக்கு பின் தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.560 குறைந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.11,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.164க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தங்கம் ரூ.1000 உயர்ந்து ரூ.1,64,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ