கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் - கோவையில் அனுமதியின்றி இயங்கும் மகளிர் விடுதிகளுக்கு நோட்டீஸ்
கோவை, 6 நவம்பர் (ஹி.ச.) கோவையில் அனுமதி இன்றி இயங்கும் மகளிர் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்து உள்ளார். கோவையில் விடுதியில் தங்கி இருந்த மாணவி விமான நிலையம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கூட்டு பா
College girl gang rape incident: Notices issued to unlicensed women’s hostels operating in Coimbatore – distributed by the district administration!


கோவை, 6 நவம்பர் (ஹி.ச.)

கோவையில் அனுமதி இன்றி இயங்கும் மகளிர் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்து உள்ளார்.

கோவையில் விடுதியில் தங்கி இருந்த மாணவி விமான நிலையம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதனால் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கையில் எடுத்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பணி புரியும் பெண்களுக்காக பல்வேறு இடங்களில் மகளிர் தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன.

இங்கு பணிக்கு செல்லும் பெண்கள் மட்டுமின்றி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளும் தங்கி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகள் உள்ளதாக தெரிகிறது.

இதில் 160 மகளிர் விடுதிகள் வரை அனுமதியின்றி இயங்கி வந்தன. இதனை தொடர்ந்து அனுமதியின்றி இயங்கும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்களுடன் கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா, தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி இன்றி செயல்படும் மகளிர் விடுதிகள் விரைந்து ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அனுமதியின்றி இயங்கிய 80 க்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகள் உரிமம் கோரி விண்ணப்பித்தனர். இந்நிலையில் கோவை மாநகர் மட்டுமின்றி ஊரக பகுதிகளிலும் அனுமதி இன்றி இயங்கி வரும் மகளிர் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது மாவட்டத்தில் அனுமதி இன்றி இயங்கும் மகளிர் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சமூக நலத்துறை சார்பில் மகளிர் விடுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

கட்டணம் குறைவாக இருப்பதால் பலர் தங்களது பெண் குழந்தைகளை தனியார் மகளிர் விடுதிகளில் சேர்க்கின்றனர். ஒரு சிலர் விடுதிகளில் கண்காணிப்பு முறையாக இல்லை, பல தங்களது வீடுகளை வாடகைக்கு பணம் அதிகமாக கிடைக்கும் என்பதற்காக மகளிர் விடுதிகளாக மாற்றி விடுகின்றனர். இங்கு முறையாக கண்காணிப்பு இல்லாததால் இங்கும் பெண்கள் இரவு நேரங்களில் வெளியே செல்கின்றனர் .எனவே இது போன்ற விடுதிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அனைத்து விடுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் அங்கு இருப்பவர்கள் எப்பொழுது வெளியே செல்கின்றனர், வருகின்றனர் என கண்காணிக்க முடியும், என்றும் சமூக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

Hindusthan Samachar / V.srini Vasan