தொடர் மழை எதிரொலி - வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்ட கோவை குற்றாலம் மீண்டும் நாளை முதல் திறப்பு
கோவை, 6 நவம்பர் (ஹி.ச.) கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்குகிறது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். இந்நி
Continuous rain impact: The Coimbatore Courtallam, which was closed due to flooding, will reopen from tomorrow, according to a Forest Department announcement.


கோவை, 6 நவம்பர் (ஹி.ச.)

கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்குகிறது.

இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக மூடப்பட்ட கோவை குற்றாலம் மீண்டும் நாளை திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை குற்றாலத்தில் அவ்வப் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

இதை வனத்துறையினர் கண்காணித்து, நீர்வரத்து அதிகரித்து இருந்தால், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பார்கள்.

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்தது, இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மழைப்பொழிவு குறைந்ததால், அருவியில் நீர்வரத்தும் குறைந்து உள்ளது.

இதனால் 15 நாட்களுக்கு பிறகு நாளை முதல் கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட வழங்கப்படும் என போளுவாம்பட்டி வனத் துறையினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

Hindusthan Samachar / V.srini Vasan