தொழில்நுட்ப வளர்ச்சியில் தொடர்ந்து தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, 6 நவம்பர் (ஹி.ச) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, எல்காட் (ELCOT) இணைந்து நடத்தும் 17ஆவது INDIA GAME DEVELOPER CONFERENC
Udhay


சென்னை, 6 நவம்பர் (ஹி.ச)

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, எல்காட் (ELCOT) இணைந்து நடத்தும் 17ஆவது INDIA GAME DEVELOPER CONFERENCE 2025 (IGDC 2025) மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்

இந்த மாநாடு முதன்முறையாக சென்னையில் நடைபெறுவது எங்களுக்கு பெருமையான தருணம், முன்பு, இது நாட்டின் வடக்குப் பகுதிகளிலும் பின்னர் ஹைதராபாத்திலும் நடத்தப்பட்டது.

விளையாட்டு மேம்பாடு மற்றும் டிஜிட்டல் படைப்புத் துறைகளை உலகத் தரத்திற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட தமிழ்நாடு அரசு அதன் AVGC-XR (அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட ரியாலிட்டி) கொள்கை 2025 ஐ அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இன்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டியுள்ளது.

தமிழ்நாடு எப்போதும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணியில் இருந்து வருகிறது.

தலைவர் கலைஞர் 1975 இல் ELCOT ஐ நிறுவினார்,1998 ஆம் ஆண்டிலேயே ஒரு தனி IT துறையை உருவாக்கியவர் கலைஞர் என்ற‌ர்.

மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, தொழில்நுட்பத்தையும் புதுமையையும் ஒரு சேர கொண்டுள்ளது,

மேலும் பேசிய அவர் தமிழ்நாடு 2024-25 ஆம் ஆண்டில் 11.19% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எட்டியுள்ளது, இது இந்தியாவிலேயே மிக உயர்ந்தது, மேலும் இரட்டை இலக்க வளர்ச்சியைக் கொண்ட ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாட்டில் 10,800 க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்களுடன், மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது என தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ