Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 நவம்பர் (ஹி.ச)
அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டமானது இன்று (நவ 06) சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையில் நடைபெற்றது.
அதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் அரசியல் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளை கண்காணிக்க குழு அமைப்படும் என்றும், மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட்டத்தில் போலீசாரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும், பொதுக்கூட்டங்களை கண்காணிக்க மற்றும் அனுமதி வழங்க குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் நிகழ்ச்சிக்கு முன் 2 மணி நேரத்திற்கு மேல் மக்கள் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களை 3 மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் கூட்டங்கள் நடத்த 10 நாட்களுக்கு முன்பும் 15 நாட்களுக்கு மிகாமல் அனுமதி கோர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு டெபாசிட் தொகை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 5,000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
50,000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் டெபாசிட் தொகையாக நிர்ணயிக்க ஆலோசனைக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b