Enter your Email Address to subscribe to our newsletters

கோழிக்கோடு, 6 நவம்பர் (ஹி.ச.)
இந்தியா முழுவதும் உள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதேபோல் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன.
இந்த கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும்.
2025 ஆம் ஆண்டிற்கான கேட் தேர்வு 170 மையங்களில் வரும் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வை கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு ஐஐஎம் நடத்தவுள்ளது.
மேலும், காலை 8.30-10.30, மதியம் 12.30-2.30, மாலை 4.30-6.30 என மொத்தம் 3 அமர்வுகளாக தேர்வு நடைபெறும்.
இந்த தேர்வெழுத நாடு முழுவதும் சுமார் 2.9 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட் நவம்பர் 5ம் தேதி வெளியிடப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் நவம்பர் 12ல் வெளியிடப்படும் என்று கோழிக்கோடு ஐஐஎம் அறிவித்துள்ளது. iimcat.ac.in எனும் வலைத்தளத்தில் சென்று ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் ஜனவரியில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b