கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருப்பத்தூர், 6 நவம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருப்பத்
கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு


திருப்பத்தூர், 6 நவம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (06.11.2025) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திருப்பத்தூரில் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

எனவே கனமழை காரணமாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று (06.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்திரவல்லி பிறப்பித்துள்ளார்.

அதே சமயம் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b