ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் - ஓமியோபதித்துறை அறிவிப்பு
சென்னை, 6 நவம்பர் (ஹி.ச.) ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேர தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 2025-2026ம் கல்வியாண்டில் ச
ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் - ஓமியோபதித்துறை அறிவிப்பு


சென்னை, 6 நவம்பர் (ஹி.ச.)

ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேர தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

2025-2026ம் கல்வியாண்டில் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் உள்ள அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்பு சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் தகுதியுள்ளவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

எம்.டி. (ஓமியோபதி) பட்டமேற்படிப்புக்கான தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். இணையவழியில் மட்டுமே விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்ப கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள் கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களை வலைதளங்களில் பார்த்து அறியலாம்.

அதேபோன்று, 2025-2026ம் கல்வியாண்டில் சுயநிதி ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் உள்ள அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.டி. (ஓமியோபதி) பட்டமேற்படிப்பு சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் தகுதியுள்ளவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

எம்.டி. (ஓமியோபதி) பட்டமேற்படிப்புக்கான தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். இணையவழியில் மட்டுமே விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்ப கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள் கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களை வலைதளங்களில் பார்த்து அறியலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b