அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் - பிரதமர் மோடி
புதுடெல்லி, 6 நவம்பர் (ஹி.ச.) பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக
அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் - பிரதமர் மோடி


புதுடெல்லி, 6 நவம்பர் (ஹி.ச.)

பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

பீகாரில் இன்று ஜனநாயகக் கொண்டாட்டத்தின் முதல் கட்டம். சட்டமன்றத் தேர்தலின் இந்தக் கட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில், முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள்.

என்று கூறியுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM