Enter your Email Address to subscribe to our newsletters

ரியாத், 6 நவம்பர் (ஹி.ச.)
முன்னணி 8 வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டும் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் வீராங்கனைகள் ஸ்டெபி கிராப், செரீனா வில்லியம்ஸ் என்ற பெயரில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இந்நிலையில், 3வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதுவதாக இருந்தது.
காயம் காரணமாக மேடிசன் கீஸ் போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரஷியாவின் எகட்ரினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய எலினா ரைபகினா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.
இதன்மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

Hindusthan Samachar / JANAKI RAM