காலில் வைத்த ஸ்டீல் பிளேட்டை அகற்றுவதற்கு மருந்து சாப்பிட்ட நபர் திடீர் உயிரிழப்பு
மயிலாடுதுறை, 6 நவம்பர் (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டை திட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி காந்தன். கூலித் தொழிலாளி ஆன இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மரம் ஏறும் பொழுது கீழே விழுந்து காலில் அடிபட்டது. இதற்கா
Death


மயிலாடுதுறை, 6 நவம்பர் (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டை திட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி காந்தன். கூலித் தொழிலாளி ஆன இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மரம் ஏறும் பொழுது கீழே விழுந்து காலில் அடிபட்டது.

இதற்காக தனியார் மருத்துவமனையில் காலில் ஸ்டீல் பிளேட் வைத்து சிகிச்சை மேற்கொண்டார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஸ்டீல் பிளேட்டை நீக்கி தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த பின்னர், அவர்கள் தந்த மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இரவு அவர் திடீரென்று உயிரிழந்தார். மருத்துவமனை சரியான மருந்துகள் தராமல் தவறான சிகிச்சை அளித்த காரணத்தால் அவர் உயிரிழந்ததாக புகார் தெரிவித்தனர் இதனை அடுத்து லட்சுமி காந்தன் உடல், பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து உடலை வாங்க மறுத்து மயிலாடுதுறை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என்று அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN