அம்பாசமுத்திரம் அருகே கல்யாண வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
நெல்லை, 6 நவம்பர் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள செட்டிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பால்பாண்டி - அமுதா தம்பதியினர். இவர்களுக்கு புஷ்பா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். தொடர்ந்து நேற்று புஷ்பாவிற்கு திருமணம் நடைபெற்ற நில
Petrol Bomb


நெல்லை, 6 நவம்பர் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள செட்டிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பால்பாண்டி - அமுதா தம்பதியினர். இவர்களுக்கு புஷ்பா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

தொடர்ந்து நேற்று புஷ்பாவிற்கு திருமணம் நடைபெற்ற நிலையில் நள்ளிரவில் வந்த இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல், பால்பாண்டி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் தடைய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலை கலந்து வீட்டின் மீது வீசியது தெரிய வந்துள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கொண்ட கும்பல் இந்சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

எதற்காக இவ்வித செயல்களில் ஈடுபட்டனர், யார் அவர்கள் என விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN