அரசியலில் விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன் - சீமான்
சென்னை, 6 நவம்பர் (ஹி.ச) நாம் தமிழர் கட்சியின் நிர்வாக குழு கூட்டம், சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலுக்கான முன் தயாரிப்பு இந்த நிர்வாக குழ
Seeman


சென்னை, 6 நவம்பர் (ஹி.ச)

நாம் தமிழர் கட்சியின் நிர்வாக குழு கூட்டம், சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

தேர்தலுக்கான முன் தயாரிப்பு இந்த நிர்வாக குழு கூட்டம். கூட்டணி போறதோ, கூட்டணிக்காக காத்திருப்பதோ அல்ல.

தனித்து களம் காண்போம். அரசியலில் வியாபாரம் செய்ய கூடாது. தேர்தல் நேரத்தில் செயல்படும் பறக்கும் படை, படுபாதகப்படையாக செயல்படுகிறது.

தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுபவர் யாராவது கைது செய்யப்படுகிறார்களா, நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை.

ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். அதை விடுத்து பணம் , பொருள் கொடுத்து வாக்கு கேட்டுக் கொண்டு, நாங்கள் பெரிய கட்சி என்று பீற்றிக்கொள்வது.

10.5% ல் இருந்த விஜயகாந்த் ,கூட்டணி போனதால், அக்கட்சியின் இன்றைய நிலை என்ன?

அதனால் விஜயகாந்த் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்.

ஒன்று புள்ளி 1 (1.1%) விழுக்காட்டில் இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம், படிப்படியாக உயர்ந்து

8.22 % வந்திருக்கிறது.

நான் பொறுமையாக மெல்ல மெல்ல செல்கிறேன். ஒரு நாள் கண்டிப்பாக வெல்வேன்.

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி போட்டியிடுகிறோம். அரசியலை வியாபாரமாக கூடாது.

வாக்குக்கு காசு கொடுப்பது காசு வாங்குவது தேச துரோகம் என்று சொல்கிறார்கள்,நீண்ட காலமாக தேசத் துரோகம் செய்து வருகிறோம்.

அரசியல் களத்தில் எனக்கு போட்டி யார் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

எனது கோட்பாடுகளுக்கு போட்டி யார்?

இருக்கின்ற கட்சிகள் யாருக்குமே தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சியில் அக்கறை இல்லை.

மன்மோகன், காய்கறி விதைகள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டார்.

விதைகள் வாங்கவும் நாம் வெளிநாட்டு நிறுவனத்தை நம்பி இருக்க வேண்டியுள்ளது.

அற்பம் 500, 1000 ரூபாய்க்காக விற்கும் மக்களை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

கேரளாவில் வாக்குக்கு காசு கொடுக்கும் முறை இருக்கிறதா? என்று கேட்டுப் பாருங்கள்.

அதிமுக கேரளாவில் போட்டியிடும் போது ஓட்டுக்கு காசு கொடுத்தார்கள் அப்போது அடித்து விரட்டப்டார்கள்.

கேரளாவில் வாக்குக்கு காசு வாங்க மாட்டார்கள். யார் சொன்னாலும் நம்பாதீர்கள்.நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்

கூட்டணிக்கு சென்ற தலைவர்களே,

நீயாவது தனித்து நில்றா,விட்டு விடாதே என்று தான் என்னிடம் சொல்கிறார்கள்...யாரும் எங்களுடன் கூட்டணிக்கு வந்துவிடு என்று சொல்வதில்.

திமுகவை வர விட கூடாது எல்லோரும் ஒன்றாக நிற்போம் வாங்க என அதிமுக அழைக்கிறது,

அதிமுகவை வர விடக்கூடாது எல்லோரும் ஒன்றாக வாருங்கள் என திமுக சொல்கிறது.இவர்கள் யாரும் வேண்டாம் ஒன்றாக வாருங்கள் என நாங்கள் சொல்கிறோம்.

விஜயகாந்த் அவசரப்பட்டு கூட்டணி வைத்ததால் என்ன ஆனது என்பதை நான் பார்த்து விட்டதால்,அவர் எடுத்த முடிவை நான் எடுக்கவில்லை.

சாராயத்துக்கு வீரன் என பெயர் வைக்கும் இழிவு இங்கே நடக்கிறது.சாராயத்திற்கு வீரன் என பெயர் வைத்து தலைவர்களை அவமதிப்பதா?

சாராயத்திற்கு வீரன் என பெயர் வைக்கும் ஒரு தலைவரை உலகத்தில் யாராவது காட்ட முடியுமா? அதை குடித்துவிட்டு அவன் வீரன் ஆகிவிடுவான்.

எல்லா படங்களும் ஆங்கில பெயர் வைத்து வருகிறது. தமிழ் மீட்சி என இந்த தலைவர்கள் யாரும் பேச மாட்டார்கள். எனக்கு போட்டி யார்?,என் கோட்பாட்டுக்கு போட்டி யார்?

சீமான் மரத்துடன் பேசுகிறார்,தண்ணீருடன் பேசுகிறார் என விமர்சனம் செய்துகொண்டு அடிப்படை அறிவே இல்லாமல் ஒரு கூட்டம் பதறாக சுற்றிக் கொண்டு இருக்கிறது.

திமுக ஆட்சியில் நடந்த நல்லது ஏதாவது உங்கள் பார்வையில் இருக்கிறதா என்கிற கேள்விக்கு,என்ன நல்லது என தேடும் அளவிற்கு இருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் இருக்கும் மாநிலம் தமிழகம் என சொல்கிறார்கள் அதை வேண்டுமானால் நான் பெருமையாக கருதுகிறேன்.

சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் மூலம்,

கணிசமான வாக்குகளை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

கடைசி இரண்டு மாதங்களில் அவசர அவசரமாக இதை செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?

தினமும் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பல ஆயிரம் பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள் . அவர்கள் அனைவரும் வாக்களிக்க கூடிய நிலை உருவாகும் போது, தமிழன் இங்கே அடிமையாகி போவான் . நமது நிலங்களை இழப்பான். இந்த நிலை கண்டிப்பாக ஒரு நாள் வரும் அப்படி வந்து விடக்கூடாது என்பதற்காகவே நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.SIR என்கிற பெயரில் சீர்திருத்தம் செய்கிறீர்களா? இல்லை சீரழிக்கிறீர்களா. கரூர் விவகாரத்தை விட்டு விடுங்கள்.அது ஒரு விவகாரம் அதை விட்டு விடுங்கள்.வட மாநிலத்திவர்கள் ஒரே மொழி ஹிந்தி என ஒன்றாக நிற்பார்கள்.

ஆனால் தமிழர்கள் நாம் ஒரே மொழி என ஒன்றாக நிற்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு தனி தீவாக சவுகார்பேட்டை உள்ளது. நாம் அங்கு சென்று ஒரு வீடு வாங்க முடியாது,வாடகைக்கு செல்ல முடியாது.

தமிழ்நாட்டில் இது போன்று நிறைய தீவுகள் உள்ளது. நான் தமிழ் இனத்தின் உரிமையை கேட்கிறேன்.

என்னை பாசிஸ்ட் என சொல்லும் நீ தான் டா கேடுகெட்ட பாசிஸ்ட். நான் பேசுவது புரிந்தால் மட்டும் எனக்கு வாக்கு செலுத்துங்கள்

இல்லையென்றால் வேண்டாம்.நான் தனித்து நின்று வென்று காட்டுகிறேனா இல்லையா என்று பாருங்கள்

முடியாது என்று சொல்பவர்கள் அங்கு ஓரமாக நின்று புலம்பிக்கொண்டு இருங்கள்.

15 ஆண்டுகளாக எத்தனை ஆயிரம் கோடி பேரம் பேசினார்கள்,நான் அடி பணிந்தேனா?

யார் யாரை ஒழிக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு நாம் மக்களுக்கு கற்பிக்க வேண்டும்.

திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தினார். மதுவை விற்பது அரசு. மது நிறுவனங்களை நடத்துவது அரசியல்வாதிகள். அந்த கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டே மது ஒழிப்பு மாநாட்டை திருமாவளவன் நடத்தினார். இதனால் என்ன பயன்?

இங்கே உள்ள அரசியல் கட்சிகள் எதிலும் சரி இல்லை என்பதால்தான், தாம் ஒரு மாற்றாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை நடத்தி வருவதாகவும், இதன் பிறகு சரியில்லாத கட்சியோடு எப்படி கூட்டணி வைக்க முடியும் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். 15 ஆண்டுகளில் தனக்கு பல கோடிகளை கொடுக்கவும், பல சீட்டுகளை தருவதற்கும் எத்தனை பேர் முன் வந்திருப்பார்கள்.

எதையுமே ஏற்காமல் ஒரு கொள்கையோடு தொடர்ந்து அரசியல் களத்தில் இயங்கி வருவதாக சீமான் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ