Enter your Email Address to subscribe to our newsletters



கோவை, 6 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூபாய் 10 லட்சம் மோசடி செய்த தம்பதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது:
கோவை சரவணம்பட்டியில் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த ஒரு பெண்ணுக்கு செல்போன் குறுந் தகவல் வந்தது.
பங்கு சந்தையில் அதிக லாபம் பெற்று தருவதாகவும், முதலீடு செய்யுமாறும் அதில் தெரிவித்தனர்.
இதனை பார்த்து தொடர்பு கொண்ட கோவை பெண்ணிடம் தாங்கள் கொடுக்கும் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
இதனை நம்பி பல்வேறு தவணைகளாக அந்த பெண் ரூபாய் 10 லட்சத்தை முதலீடு செய்தால், அந்த பணத்தை திரும்பி கேட்ட போது லாபத் தொகையையும் திரும்பித் தராமல் மோசடி செய்து விட்டார்.
இதுகுறித்து சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. இதே மோசடி ஆசாமிகள் தென்காசி, திருச்சி, கன்னியாகுமரி, நாமக்கல், ஆந்திர மாநிலம் உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து உள்ளனர்.
இதை தொடர்ந்து தென்காசி சைபர் கிரைம் போலீசார் திருவள்ளுவரை சேர்ந்த ராஜு முகமது அனீப், அவருடைய மனைவி அன்னு ஆகியோரை கைது செய்தனர்.
கோவையிலும் மோசடியில் ஈடுபட்டதால் கோவை போலீசார் தென்காசிக்கு சென்று மூன்று பேரையும் கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்.
மோசடி செய்தது தொடர்ந்து விசாரணை நடத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan