Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 6 நவம்பர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா இளமனூர் கிராமம் பிளக்ஸ் போர்டு வைப்பது தொடர்பாக இரு சமுதாயத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. சம்பவத்தின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
அனுமதி மறுத்த நிலையில் பரமக்குடி ஐந்துமுனை பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் டிஐஜி மூர்த்தி, எஸ்பி சந்தீஸ் ஆகியோர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பரமக்குடி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் பரமக்குடி ஐந்துமுனை பகுதியில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதி மறுக்கப்பட்டதை மீறி கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு அருகில் இருந்த தனியார் மகாலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஒரு சில வாக்குவாதங்கள் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தனியார் மஹாலில் தங்க வைக்கப்பட்டபோது, ஒரு பெண் இன்ஸ்பெக்டர் ஆர்ப்பாட்டக்காரர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்பட்டது.
இதனை அடுத்து அங்கிருந்து இன்ஸ்பெக்டர் வெளியேற்றப்பட்டு அங்கு கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN