Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 6 நவம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் உள்ளிட்ட துணை கண்காணிப்பு அலுவலங்களை கொண்ட 20 காவல் நிலையங்கள் உள்ளன.
இதில் கோவில்கள், சுற்றுலா தலங்கள், கல்லுாரிகள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள் போன்றவை உள்ளன.
இந்த பகுதிகளில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள், வாகன விபத்துகள் கண்காணிக்க போதியளவில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் இருந்தன. எனவே கூடுதல் 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு மாவட்டத்தின் நகரங்களில் முக்கிய இடங்களில், 250 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதன் வாயிலாக, குற்றச்சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b