குடும்ப பிரச்சனை காரணமாக மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மருமகன்
தென்காசி, 6 நவம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஊத்துமலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கூலித் தொழிலாளியான பாலசுப்பிரமணியன், மனைவி காளீஸ்வரி இடையே தகராறு ஏற்பட்டது. இதை தட்டிக்கேட்ட மாமியார் கருத்தத்துறைச்சியை , மருமகன் பாலசுப்பி
Murder Case


தென்காசி, 6 நவம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஊத்துமலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கூலித் தொழிலாளியான பாலசுப்பிரமணியன், மனைவி காளீஸ்வரி இடையே தகராறு ஏற்பட்டது.

இதை தட்டிக்கேட்ட மாமியார் கருத்தத்துறைச்சியை , மருமகன் பாலசுப்பிரமணியன் அரிவாளால் வெட்டியதில், சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியில் மாமியார் கருத்தத்துறைச்சி உயிரிழந்தார்.

மனைவி காளீஸ்வரி பலத்த வெட்டு காயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக சங்கரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN