புதிய அரசாங்கத்தை அமைக்க மாற்றத்தை கொண்டு வாருங்கள் - தேஜஸ்வி யாதவ் கோரிக்கை
பாட்னா, 6 நவம்பர் (ஹி.ச.) பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகு​தி​களில் இன்று (நவ 06) முதல்​கட்ட தேர்​தல் நடை​பெற்று வருகிறது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், இன்று தேர்தல் நடைபெறும் ரகோபூர் தொகுதியி
புதிய அரசாங்கத்தை அமைக்க மாற்றத்தை கொண்டு வாருங்கள் - தேஜஸ்வி யாதவ் கோரிக்கை


பாட்னா, 6 நவம்பர் (ஹி.ச.)

பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகு​தி​களில் இன்று (நவ 06) முதல்​கட்ட தேர்​தல் நடை​பெற்று வருகிறது. மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ், இன்று தேர்தல் நடைபெறும் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த சூழலில், தேஜஸ்வி யாதவ் இன்று குடும்பத்தினருடன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

மேலும், அவர் பிஹாகார் முன்னாள் முதல்வரும், தனது தந்தையுமான லாலு பிரசாத் யாதவ், தாய் ராப்ரி தேவி மற்றும் மனைவி ராஜ்ஸ்ரீ யாதவ் உள்ளிட்டோருடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பிஹார் மக்கள் தங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். வேலைவாய்ப்பு, கல்வி, நல்ல சுகாதார சேவைக்காக வாக்களியுங்கள்.

நாங்கள் வெற்றி பெறப் போகிறோம், பிஹார் வெற்றி பெறப் போகிறது. நவம்பர் 14 ஆம் தேதி ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும்.

நவம்பர் 14 ஆம் தேதி மாற்றம் ஏற்படும். புதிய அரசாங்கத்தை அமைக்க மாற்றத்தை கொண்டு வாருங்கள்.

என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b