உண்மையின் பக்கம் நின்ற மீடியாவுக்கு நன்றி - நடிகை கௌரி கிஷன்
சென்னை, 7 நவம்பர் (ஹி.ச) 96, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த கௌரி கிஷன் இப்போது அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் நடித்துள்ள படம்தான் அதர்ஸ். இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்த ப
Gauri


சென்னை, 7 நவம்பர் (ஹி.ச)

96, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த கௌரி கிஷன் இப்போது அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் நடித்துள்ள படம்தான் அதர்ஸ்.

இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு

சமீபத்தில் நடந்த போது யூடியூப்பர் ஒருவர் ஹீரோவிடம் பாடல் காட்சியில் நாயகியை தூக்கும்‌போது ரொம்ப வெயிட்டா இருந்தாங்களா, நாயகியோட வெயிட் எவ்வளவு என்று கேட்டார்.

இதனை தொடர்ந்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நாயகி கௌரி கிஷன்,

என்னோட எடை என்ன அப்படின்னு முட்டாள் தனமான கேள்வி எல்லாம் கேட்கிறார்கள் என்று பேசியிருந்தார்.‌

இந்த நிலையில் நேற்று அதர்ஸ் படத்தின் பத்திரிகையாளர் காட்சி முடிந்ததும் நடந்த பிரஸ் மீட்டில் அதே யூடியூபர் என்னை எப்படி முட்டாள் என்று சொல்லலாம் மன்னிப்பு கேளுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் இந்திய அளவில் பேசுபொருளானது ரோகிணி, குஷ்பு உள்ளிட்ட நடிகைகள், திரைத்துறையினர் கௌரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று அதர்ஸ் படத்தை ரசிகர்கள் உடன் பார்த்த கௌரி உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கௌரி,

நேற்று நடந்த விஷயத்தில் சப்போர்ட்டாக இருந்த மீடியாவுக்கு ரொம்பவும் நன்றியுடன் இருக்கிறேன்.

உண்மை என்ன என்பதை மட்டும் தான் நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் மீடியா எந்த வித குழப்பமும் இல்லாமல் எப்போதும் நியாயத்தின் பக்கம் நின்றுள்ளீர்கள்.

நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ