Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.)
பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து திரைப்பட கலாச்சாரம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியை பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இதில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர் சத்யராஜ், இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் தனஜெயன், நடிகை ரேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் தமிழ் சினிமா பங்களிப்பை போற்றினர்.
சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை காசோலைகள் வழங்கப்பட்டன.
பல திரைபட கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷ்,
இயக்குநர் வெற்றிமாறனின் சர்வதேச திரைப்பட மற்றும் கலாச்சார நிறுவனமும், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனலும் இணைந்து ‘வடசென்னை 2’ திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்தார்.
மேலும், புதிய ‘வேல்ஸ் மியூசிக்கல்ஸ்’ நிறுவனம் மூலம் சிறந்த பாடல்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J