Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 7 நவம்பர் (ஹி.ச.)
கோவை, கரும்புக்கடை அருகே உள்ள அன்பு நகர் அலீப் அவென்யூவை சேர்ந்தவர் ரபிதீன்.
இவரது மனைவி சுமைய்யா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் ரிஸ்வான் ( 12) மாநகராட்சி பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ரிஸ்வான் மற்றும் அவரது சகோதரி பள்ளியை முடித்து வீட்டிற்கு வந்து உள்ளனர்.
வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்று திரும்பாததால் இருவரும் வீட்டில் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது ரிஸ்வான் வீட்டில் இருந்த அறையில் சேலையில்தொட்டில் கட்டி விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சேலை ரிஸ்வானின் கழுத்தை இறுக்கி உள்ளது இதனால் அவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.
சிறிது நேரத்தில். சேலை கழுத்தை இறுக்கிய நிலையில் ரிஸ்வான் துடித்துடித்து உயிரிழந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்த அவனது சகோதரி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தால். உடனே அக்கம், பக்கத்தினரை உதவிக்கு அழைத்து உள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது ரிஸ்வான் இறந்து இருந்தது தெரியவந்தது.
பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வீட்டிற்கு வந்து ரிஸ்வானின் உடலை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து கரும்புக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரிஸ்வானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan