Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 7 நவம்பர் (ஹி.ச.)
திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், புதுச்சேரி மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநிலச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி தலைமையில் இன்று
(நவ 07) சேலத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி., டி.எம்.செல்வகணபதி எம்.பி, மாநில துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் இரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், தமிழ் கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், வி.ஜி.கோகுல், திருமதி பூர்ணசங்கீதா சின்னமுத்து, திருமதி ஜெ.வீரமணி, ஜெ.இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம் 1 :
தமிழ்நாட்டைக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற மிகப்பெரிய உயரத்துக்குக் கொண்டுசேர்த்திருக்கும் கழகத்தலைவர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும்
தீர்மானம் 2 :
விளையாட்டில் உலக அரங்குகளுக்குத் தமிழ்நாட்டு மாணவர்களை கொண்டுசேர்த்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைந்தலைவர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.
தீர்மானம் 3 :
முதல் தலைமுறைப் பட்டதாரிகளை உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பெறும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ள திராவிட மாடல் அரசுக்கு நன்றி
தீர்மானம் 4 :
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்த கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி.
தீர்மானம் 5 :
தமிழ்நாட்டு மாணவர்களை மேடையேற்றி அவர்களின் உணர்வுகளை உலகறியச்செய்த கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி
தீர்மானம் 6 :
காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவு படுத்திய திராவிட மாடல் அரசுக்கு நன்றி.
தீர்மானம் 7 :
தமிழ்நாட்டின் பள்ளிகளில் வாட்டர் பெல் (water bell) திட்டத்தினை தமிழகமெங்கும் இருக்கக் கூடிய பள்ளிகளில் கொண்டுசேர்க்க மாணவர் அணி சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும்
தீர்மானம் 8 :
கலைஞர் பல்கலைக்கழகம் அமையத் தடையாக இருக்கும் ஆளுநருக்கு கண்டனங்கள் !
தீர்மானம் 9 :
கழக இளந்தலைவர் அவர்களின் பிறந்தநாளில் கழக மாவட்டந்தோறும் மாணவர்களிடையே திராவிட சித்தாந்தங்களைக் கொண்டுசேர்க்கும் வகையில் கருத்தரங்கங்கள் நடத்த வேண்டும்.
தீர்மானம் 10 :
SIR எனும் இந்திய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க-வின் கயமைத்தனத்துக்கு எதிராகக் கழகத் தலைவர் அவர்கள் முன்னெடுக்கும் அனைத்து வகை அறப்போராட்டத்துக்கும் மாணவர் அணி சார்பில் வலுச்சேர்க்க வேண்டும்.
தீர்மானம் 11 :
'எனது வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி இருநூறு தொகுதிகளில் வெற்றி' என்ற கழகத் தலைவரின் முழக்கத்தை நிறைவேற்றுவோம்!
இவ்வாறாக 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Hindusthan Samachar / vidya.b