தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினராக சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு முகாம்
கோவை, 7 நவம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி - துணைத்தலைவர் கனிமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்களின் நலன் தொடர்பான கள ஆய்வுக்கூட்டம், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய த
Awareness camp on enrolling temporary sanitation workers as welfare board members


கோவை, 7 நவம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி - துணைத்தலைவர் கனிமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்களின் நலன் தொடர்பான கள ஆய்வுக்கூட்டம், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, மற்றும் துணைத்தலைவர் கனிமொழி ஆகியோர் தலைமையில் கோவை டவுன்ஹாலில் உள்ள 82 -வது வார்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தின் கீழ் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற நலத்திட்டங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் வாரிசு தாரர்களுக்கு, கல்வி உதவித்தொகை, கல்வி கடன் வழங்குவது குறித்தும், தற்காலிக பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தற்காலிக பணியாளர்களுக்கு வேட்டி சேலை மற்றும் இனிப்புகளை தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி மற்றும் துணைத்தலைவர் கனிமொழி ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்வில், தூய்மைப்பணியாளர் நலவாரிய உறுப்பினர் தென்னை சிவா, தாட்கோ மேலாளர் ரஞ்சித்குமார், சுகாதார ஆய்வாளர் தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / V.srini Vasan