Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 7 நவம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (24) (பால் வியாபாரி) அருகே உள்ள கணபதிபட்டியைச் சார்ந்த சந்திரன் மகள் ஆர்த்தி என்பவரை காதலித்து கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்தனர்.
பால் கறவைக்கு ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் 12.10.25 சென்றபோது கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தை அடுத்து பெரியார் பாசன கால்வாய் பாலத்தில் ராமச்சந்திரனை வழிமறித்த சந்திரன் அரிவாளால் சரமாறியாக வெட்டி கொலை செய்தார்.
தற்போது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமச்சந்திரனை கொலை செய்த சந்திரன் மற்றும் அவரது மகன் ரிவின் ஆகியோர் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொது அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்ட வகையில் மேற்சொன்ன சந்திரன் மற்றும் ரிவின் ஆகியோரை தடுப்புக்காவலில் வைத்து உத்தரவிடக் கேட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்று சந்திரன் மற்றும் ரிவின் ஆகியோர் தடுப்புக்காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தந்தை சந்திரன் மற்றும் மகன் ரிவின் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / ANANDHAN