இன்று எம்.பி கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் என பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகர் கமலஹாசன் இன்று (நவ 07) தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடந்த ஜூலை 25 ஆம் தேதி ராஜ்யசபா எம்.பியாக கமல்ஹாசன்
இன்று எம்.பி கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து


சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.)

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் என பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகர் கமலஹாசன் இன்று

(நவ 07) தனது 71 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

கடந்த ஜூலை 25 ஆம் தேதி ராஜ்யசபா எம்.பியாக கமல்ஹாசன் பதவியேற்றார்.

எம்.பி கமல்ஹாசனாக இம்முறை பிறந்த நாள் காணும் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் - கலைஞானி

கமலஹாசன் அவர்களுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்!

நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்!

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b