நடிகர் அருண் விஜய் வீடு மற்றும் அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. சென்னையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடு, சென்னை உயர்நீதிமன்ற வளாகம், சென்னை க
நடிகர் அருண் விஜய் வீடு, அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. சென்னையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடு, சென்னை உயர்நீதிமன்ற வளாகம், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் உள்ள சுங்க தலைமை அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இ - மெயில் ஒன்று வந்துள்ளது.

அதில் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டிலும், திமுக தலைமை அலுவலகமான தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் இன்று (நவ 07) காலை முதல் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் புரளி எனத் தெரிய வந்தது.

அதே சமயம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் அருண் விஜய் வீட்டிற்கும், அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b