Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 7 நவம்பர் (ஹி.ச.)
கோவில்பட்டி பகுதியில் ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி இன்று 7ம் தேதி பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரெயில் (வண்டி எண்: 16731) மற்றும் திருச்செந்தூர்-பாலக்காடு விரைவு ரெயில் (வண்டி எண்: 16732) ஆகிய இரண்டு ரெயில்களும் விருதுநகர்-திருச்செந்தூர் ரெயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் நவம்பர் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை 5 நாட்கள் பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16731) கடம்பூர் ரெயில் நிலையத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டு 3 மணி நேரம் கால தாமதமாக திருச்செந்தூருக்கு புறப்பட்டுச் செல்லும்.
இதே போல் இன்று (7ம் தேதி) இயக்கப்படும் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 20627) குமாரபுரம் ரெயில் நிலையத்தில் காலை 11.50 மணி முதல் மதியம் 2.50 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டு 3 மணி நேரம் கால தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என தென்னக ரெயில்வே மதுரை மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b