Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 7 நவம்பர் (ஹி.ச.)
அன்னை இந்திரா காந்தி அவர்களின் அமைச்சரவையில் விவசாய துறை அமைச்சராக இருந்து போது இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவரும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அமைச்சரவையில் நிதி மற்றும் கல்வி அமைச்சராக இருந்தபோது கொங்கு மண்டலத்தின் வாழ்வாதாரமான விவசாயம் செழிக்க பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் கொண்டு வந்த தியாக தலைவர்களில் ஒருவருமான முன்னாள் மத்திய மாநில அமைச்சர் மற்றும் முன்னாள் கவர்னர் பாரதரத்னா ஐயா சி.சுப்பிரமணியம் அவர்களின் 25 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் ரவுண்டானாவில் உள்ள அவருடைய முழு உருவச் சிலைக்கு எ. ம் .கந்தசாமி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அவருடைய உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .
இந்த நிகழ்வில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பீளமேடு விஜயகுமார். வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கராஜ். தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சக்திவேல். மற்றும் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வி எம் சி மனோகர் ஐஎன்டி யூசி கோவை செல்வம் பொருளாளர் சௌந்தர குமார். இளைஞர் காங்கிரஸன் மாநில தலைவர் சூரிய பிரகாஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர்கள் டிவிஷன் தலைவர்கள் வட்டார தலைவர்கள் மகிலா காங்கிரஸ்னர் இளைஞர் காங்கிரஸ் சார் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்
Hindusthan Samachar / V.srini Vasan