Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 7 நவம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் முருகன்
(வயது 57). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரடிவாவியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவருடன் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த ராஜ்கண்ணு (39) என்பவரும் டெய்லராக வேலை செய்து வந்தார்.
கடந்த 20-6-2020 அன்று இரவு கரடிவாவியில் இருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபம் அடைந்த முருகன், ராஜ்கண்ணுவை பிடித்து தள்ளிவிட்டார். இதில் அவர் கீழே விழுந்து தலையில் காயமடைந்து ராஜ்கண்ணு இறந்தார்.
இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது வழக்கு விசாரணை திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், ஆத்திரம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ராஜ்கண்ணு ஈடுபட்டதால் அவரை முருகன் கீழே தள்ளிவிட்டதில் இறந்துள்ளார்.
இதனால் கொலையில்லாத மரணம் விளைவித்த குற்றமாக கருதப்பட்டு முருகனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN