செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 14 பேரை அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.) முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 14 பேரை அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில், அதிமுகவில் இருந்து நீக்கப
Eps


Letter


சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.)

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 14 பேரை அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், TTV தினகரனுடன் இணைந்து அதிமுக எம் எல் ஏ செங்கோட்டையன் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அதிமுக கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் என கருதப்படும் முன்னாள் எம்பி சத்தியபாமா உட்பட 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, மா கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேரின் பெயரை குறிப்பிட்டு அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ