Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 7 நவம்பர் (ஹி.ச.)
ஈரோட்டில் கடந்த 5 ஆம் தேதி சூரம்பட்டி அருகே அங்கன்வாடிக்கு சென்ற 5 வயது சிறுவன் சஞ்சய் அங்கன்வாடி மையத்தின் அருகே பெரும்பள்ளம் ஓடையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் மாவட்ட திட்ட அலுவலர் பூங்கோதை விசாரணை மேற்கொண்ட நிலையில், அங்கன்வாடி பணியாளர் லாவண்யா என்பவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அங்கன்வாடி மேற்பார்வையாளர் மல்லிகா என்பவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி மையத்தில் அந்த மையத்தில் பதிவு செய்யாத சிறுவர், சிறுமியர், குழந்தைகள் என யாரையும் வைத்து கொள்ள கூடாது என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதை மீறினால் அங்கன்வாடி பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட திட்ட அலுவலர் பூங்கோதை எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN