Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 7 நவம்பர் (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை ஏற்படுத்திருக்கக்கூடிய வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாவட்டத்தின் முக்கிய நீர்நிலையங்கள் தொடர்ந்து நிரம்பி வருகிறது.
இதையடுத்து பரந்தூர், குணகரம்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.
பரந்தூர் சுற்றுவட்டார ஏரியில் இருந்து வெளியேறிவரக்கூடிய உபரி நீர் பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் ஆற்றுக்கு இந்த தரைப்பாலத்தை கடந்து செல்கிறது. சுற்றியிருக்கக்கூடிய கோட்டூர், எடையார்பாக்கம் என 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் தரைப்பாலத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் உபரி நீர் அதிகளவில் செல்வதால் குணகரம்பாக்கம் தரைப்பாலத்தில் மேல் 2 அடிக்கு வெள்ளநீர் சென்று வருகிறது.அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக கட்சி அளிக்கிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு சிறுவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில், அப்பகுதி மக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த சாலையில் போக்குவரத்து துண்டித்து மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b