கரூரில் ஆம்புலன்ஸ் உரிமையாளர்களிடம் மீண்டும் சிபிஐ விசாரணை
கரூர், 7 நவம்பர் (ஹி.ச.) கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது கரூரில் கடந்த மாதம் 17
Karur CBI


கரூர், 7 நவம்பர் (ஹி.ச.)

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது கரூரில் கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர்களை மீட்கும் பணிக்காக வருகை புரிந்த தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என 11 பேர் நேற்று விசாரணைக்கு ஆஜராகி 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்று மீண்டும் புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் இன்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 3 நபர்கள் சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ள பயணியர் மாளிகைக்கு விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

மேலும் நேற்று விசாரணைக்கு வந்திருந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜராகினர்.

இந்த நிலையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 3 நபர்கள் விசாரணை முடிந்து சென்றுள்ளனர்.

இதில் நேற்று விசாரணைக்கு வந்த கொங்கு ஆம்புலன்ஸ் உரிமையாளர் சரவணன் இன்று மீண்டும் ஆஜரான நிலையில் உணவு அருந்த சென்றார் மீண்டும் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN