கோமுகி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி, 7 நவம்பர் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுமார் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தண்ணீரை திறந்து வைத்தனர். தொடர்
Komukhi Dam Collector


கள்ளக்குறிச்சி, 7 நவம்பர் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுமார் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தண்ணீரை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து பாசன வாய்க்கால் வாயிலாக பாய்ந்தோடி வந்த தண்ணீரை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாசன விவசாயிகள் மலர் தூவி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 29 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரின் மூலமாக வடக்கனந்தல்,பரிகம், கரடிசித்தூர், மண்மலை,தாவடிப்பட்டு,செல்லம்பட்டு,மாவடிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பழைய மற்றும் புதிய பாசனத்தின் மூலமாக சுமார் 10,860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோமுகி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் வடக்கனந்தல், அக்கராபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நாற்று நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN