கத்தரிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டிய கோயம்பேடு வியாபாரிகள்
சென்னை, 7 நவம்பர் (ஹி.ச) வழக்கத்தை விட வரத்து அதிகரித்தனின் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் கத்தரிக்காய், வெள்ளரிக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக குறைந்துள்ளது. நேற்று கிலோ 40ரூபாய்க்கு விற்பனையான கத்தரிக்காய் இன்று ஒரே நாளி
Koyambedu


சென்னை, 7 நவம்பர் (ஹி.ச)

வழக்கத்தை விட வரத்து அதிகரித்தனின் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் கத்தரிக்காய், வெள்ளரிக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக குறைந்துள்ளது.

நேற்று கிலோ 40ரூபாய்க்கு விற்பனையான கத்தரிக்காய் இன்று ஒரே நாளில் 25ரூபாய் குறைந்து 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

60ரூபாய்க்கு விற்பனையான வெண்டைக்காய் 40ரூபாய் குறைந்தே 20 ரூபாய்க்கு விற்பனை, 130ரூபாக்கு விற்பனையான அவரைக்காய் 50ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இன்று சந்தைக்கு வந்த பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனையாகாமல் மூட்டை மூட்டையாய் தேங்கிக்கிடக்கிறது.

கத்தரிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனையாகததால் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டினர் கோயம்பேடு வியாபாரிகள்.

Hindusthan Samachar / P YUVARAJ