Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை புதூர் கிராமத்தில் ஞானவேல் முருகேஸ்வரி இவர்களின் மகளான ரூபினி தேவி இவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு படித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சாணாம்பட்டி கிராமத்தில் உள்ள தங்கச்சாமி சின்னப்பொண்ணு இவர்களின் மகன் பிரேம்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
பிரேம்குமாருக்கும் ரூபிணி தேவிக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில்
இன்று காலை சாணாம் பட்டியில் உள்ள பிரேம்குமார் வீட்டில் ரூமினி தேவி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் அவரது உடலை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ரூபிணி தேவியின் உறவினர்கள் ரூபினி தேவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்த நிலையில் ரூபிணி தேவியின் கணவர் பிரேம்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற வாடிப்பட்டி போலீசார் காவல் நிலையத்தில் உள்ளே வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்த ரூபிணி தேவியின் உடல் மருத்துவ கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இறந்த ரூபினி தேவி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் காவல்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் காவல் நிலையம் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கணவர் ரூபினி தேவியின் கணவர் மற்றும் மாமனார் மாமியார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ