உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் பெயர்கள் பொறித்த தியாகச் சுவர் - அமைச்சர்கள் திறந்து வைத்து மரியாதை
சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.) கடந்த 2023 செப்டம்பர் 23 ஆம் தேதி உடலுறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் திருவுடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத
உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் பெயர்கள் பொறித்த தியாகச் சுவர் -  அமைச்சர்கள் திறந்து வைத்து மரியாதை


சென்னை, 7 நவம்பர் (ஹி.ச.)

கடந்த 2023 செப்டம்பர் 23 ஆம் தேதி உடலுறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் திருவுடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற மாவட்ட அளவிலான அலுவலர்கள் அரசு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபிறகு இதுவரை 253 பேர் உடலுறுப்பு தானம் செய்து, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இரண்டு ஆண்டுகளில் மட்டும் இவ்வளவு பேர் உடலுறுப்பு தானம் செய்திருப்பது என்பது இந்திய அளவில் தமிழ்நாடுதான் இன்றைக்கு முதலிடத்தில் இருக்கின்றது.

கடந்த ஆண்டும் கூட அதிக அளவில் உடலுறுப்பு தானம் செய்தவர்கள் என்கின்ற வகையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்தது. இந்த திட்டம் அறிவித்தபிறகு இதுவரை உடலுறுப்பு தானம் பதிவு செய்திருப்பவர்கள் 23,189 பேர். இப்படி இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் இந்த சிறப்புக்குரிய திட்டத்திற்கு மேலும் நிறைவேற்றுகின்ற வகையில் தியாகச் சுவர் (wall of honour) நிறுவப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் இதுபோல் நிறுவப்படவிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இந்தத் தியாகத்தைப் போற்றும் மகத்தான தியாகச் சுவர் நிறுவப்பட்டு. இன்று (7.11.2025) சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவு ம் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார்,சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தாராமன், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் அழகிரிசாமி, மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் உயரலுவலர்கள் உடனிருந்தனர்

Hindusthan Samachar / vidya.b