Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 7 நவம்பர் (ஹி.ச.)
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் ஆதரவுடன், புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமத்தின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு மையம் மூலம் 'பசுமை திறன் மேம்பாட்டு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, வரும்
டிசம்பர் 22-ம் தேதி 64 வேலை நாட்கள் கொண்ட சூரிய நிறுவன உதவி மேலாளர், 56 வேலை நாட்கள் கொண்ட மின்சார வாகன சார்ஜிங் நிறுவல் நுட்ப நிபுணர், ஜனவரி
19ம் தேதி, 49 வேலை நாட்கள் கொண்ட ஆகாயத் தாமரை தொழில் முனைவர் பயற்சிகள் அளிக்கப்படுகிறது.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 10ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு கட்டணம் இல்லை.
புதுச்சேரி பகுதியை தவிர பிற பகுதிகளிலிருந்து வரும் விண்ணப்பதாரர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு பயிற்சிக்கும் மொத்தம் 30 பேர் மட்டுமே சேர்க்கப்படுவர். பயிற்சி முடிவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.
கல்வித் தகுதிக்கு https://eiacp.moef.gov.in/drc/eiacp/centre/PPCC என்ற இணையதளத்தை பார்வையிடவும். மேலும், விபரங்களுக்கு 0413-2201256, 8056972562, 9789702745 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b