Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 7 நவம்பர் (ஹி.ச.)
புதுவை அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மின்சார பேருந்துகளை கடந்த 27ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த மின்சார பேருந்துகளுக்கு புதுவை மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் 10 நாட்கள் மட்டுமே மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கமாக காலை 7 மணி முதல் இயக்கப்படும் பேருந்துகள் இன்று(நவ 07) இயக்கப்படவில்லை.
அவை அனைத்தும் தாவரவியல் பூங்கா எதிரே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சம்பள உயர்வு கோரி மின்சார பேருந்து ஓட்டுனர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிர்வாக தரப்பில் ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், பேச்சுவார்த்தை பலன்தரவில்லை. இதையடுத்து இன்று காலை முதல் மின்சார பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தொடங்கிய 10 நாட்களிலேயே மின்சார பேருந்துகள் முடக்கி பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயணம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b