Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 நவம்பர் (ஹி.ச)
பாகுபலி, ஆர் ஆர் ஆர் படத்தைத் தொடர்ந்து எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் மகேஷ்பாபு உடன் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி ஹைதராபாத்தில் வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிருத்விராஜின் கதாபாத்திர போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளியாக நடித்துள்ள பிருத்விராஜ் கும்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ