Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 7 நவம்பர் (ஹி.ச.)
தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, இது தொடர்பாக கடந்த ஆக., 11ல் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.
டில்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சுற்றித்திரியும், தெருநாய்களை பிடித்து உடனடியாக காப்பகங்களில் அடைக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று
(நவ., 07) உச்ச நீதிமன்றம் மேலும் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தெருநாய் பிரச்னை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அமர்வு இன்று (நவ.,07) பிறப்பித்துள்ள உத்தரவுகள் பின்வருமாறு:
மருத்துவமனைகள் விளையாட்டு வளாகங்கள் ரயில் நிலையங்கள் பள்ளி அருகே என அனைத்து இடங்களிலும் இருந்து உடனடியாக தெரு நாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
பொது இடங்களில் தெருநாய்கள் நுழையாமல் கண்காணித்து தடுக்க வேண்டும்.
தெருநாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகு பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடக்கூடாது. அவற்றை முறையான தங்குமிடத்தில் மாற்ற வேண்டும்.
சாலைகளில் திரியும் கால்நடைகளை கண்காணித்து புகார் அளிக்க குழு அமைக்க வேண்டும்.
இந்த புதிய உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் 8 வாரங்களில் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / vidya.b