திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வழிபாடு
திருப்பூர், 7 நவம்பர் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை புரிந்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தா
Udumalpet Nainar


திருப்பூர், 7 நவம்பர் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் உடுமலை

அருகே உள்ள திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

வருகை புரிந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் பேசும் பொழுது,

தமிழக அரசு தற்பொழுது பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ மற்றும் தேர்தல் சம்பந்தமான கூட்டங்கள், 20 லட்சம் இருப்புத் தொகை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து எதிர்ப்பு தெரிவித்தது குறித்து கேட்டதற்கு,

திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. ஒருவேளை திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என தெரியவில்லை என்று பேசினார்.

மேலும் தவெக தலைவர் விஜய் வரும் தேர்தலில் திமுகவுக்கும் தவெக்காவுக்குத்தான் நேரடியான போட்டி என்று பேசி வரும் நிலையில், நான் பலமுறை சொல்லி விட்டேன்.

எங்களது கூட்டணி தான் அமோக வெற்றி பெறும்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. உதாரணமாக இரண்டாவது முறையாக கோவையில் இன்று பெண் கடத்தப்பட்டு இருப்பது கூறலாம்.

சட்டமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக அமோக வெற்றி பெறும் என பேசினர்.

Hindusthan Samachar / ANANDHAN