பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - நடிகர் சரத்குமார்
மதுரை, 8 நவம்பர் (ஹி.ச.) மதுரை விமான நிலையத்தின் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் தெரிவித்ததாவது, youtuber நடிகை பற்றி வெயிட் குறித்து பேசியது பற்றிய கேள்விக்கு? என்னை பொறுத்
சரத்குமார்


மதுரை, 8 நவம்பர் (ஹி.ச.)

மதுரை விமான நிலையத்தின் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் தெரிவித்ததாவது,

youtuber நடிகை பற்றி வெயிட் குறித்து பேசியது பற்றிய கேள்விக்கு?

என்னை பொறுத்தவரையில் அந்த கேள்வி கேட்டது தப்பு என்று தான் நான் கூறுவேன் விழாவில் நீங்கள் கேள்வி கேட்கும் போது அந்த படத்தை பற்றி பேச வேண்டும் அவருடைய கேரக்டர் பத்தி பேச வேண்டும் படம் நல்லா வந்திருக்கா என்று பேச வேண்டும் இவர் பற்றி கதாநாயகன் பற்றி இவ்வாறு கேட்டிருக்கலாம்.

அதைதவிர்த்து வெயிட் குறித்து பேசியது தவறு எனக்கு என்ன வருத்தம் என்றால் படவிழாவில் கூட இருக்கும் நடிகரும் சரி இயக்குனரும் கூட இருக்கும் சக நடிகைகளை கேள்வி கேட்கும் போது இவ்வாறு கேள்வி கேட்கிறீர்கள் என்று கேட்க வேண்டும் அதுதான் ஒரு ஆண் மகனுக்கு அழகு அதை செய்யாது மிக வருத்தம் அளிக்கிறது.

தேர்தல்ஆணையம் மூலமாக திருட்டுத்தனமாக திமுக வீழ்த்தும் என்ற கேள்விக்கு?

ஒவ்வொரு கட்சியும் ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சியும் சரி இருக்கும் கட்சியை பற்றி குறை சொல்வது இருக்கும் எஸ் ஐ ஆர் கொண்டு வந்தாலும் சரியா வராது என்று சொல்றவர்கள் இருப்பார்கள் அது ரிவிஷன்காக அல்ல கள்ள ஓட்டு போடுவதற்காக என்று சொல்வார்கள் எல்லாத்தையும் தீவிரமாக ஆராய்ந்து செயல்படும் ஓட்டு தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும் எந்த ஒரு சீர்திருத்தமாக இருந்தாலும் சரி சிறப்பாக ரிவிசன் என்றாலும் சரி பார்ப்பது தான் எனக்கே வீட்டுக்கு மூன்று தடவை வருவார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள் நான் வந்து ஒரு உண்மையான வாக்காளராக இருந்தால் ஆதார் கார்டை காண்பிப்பது தவறு இல்லை நல்லது என்று நான் நினைக்கிறேன்.

2026 இல் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போற்றி என்று தொடர்ச்சியாக விஜய் கூறியது பற்றிய கேள்விக்கு?

அது அவருடைய கருத்து அழுத்தமாக சொல்வதற்கு அவரைத்தான் கேட்க வேண்டும் டி டிவியும் அதே போல் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புடிக்காத காரணத்தினால் கூறி இருப்பார் ஒரு இயக்கத்தை உருவாக்கி தான் நடத்த வேண்டிய இயக்கத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று எண்ணத்தோடு இருக்கும்போது இன்னைக்கு வந்த கட்சியோடு சேர்வோம் என்று கூறுவது அவர்களுக்கு தான் அவலம்.

பாஜகவும் அதிமுகவும் கூட்டணியில் இருக்கிறார்கள் தொடர்ந்து அதிமுகவில் இருந்து ஒரு முக்கிய தலைவர்களும் வெளிவந்து கொண்டிருக்கிறார்கள் இதைப் பற்றிய கேள்விக்கு?

2026 தேர்தலில் என்ன நடக்கிறது என்று தெரியாது நாளை என்ன நடக்கிறது என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது அதனால் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம் இது நான் உடனே பதில் சொல்லும் நிலைமையில் இல்லை மாநில கமிட்டியில் நான் உறுப்பினராக இருக்கிறேன் என்னை பொறுத்தவரையில் தனியாக பைஜான் பாண்டே தேர்தல் பொறுப்பாளராக நியமிச்சிருக்கிறார்கள் நாம் தலைவர் மாநில தலைவர் நயனார் நாகேந்திரன் உட்கார்ந்து கூட்டணி எப்படி உருவாக வேண்டும் சந்திப்பது அவர்களுடைய கடமை துணையாக இருந்து செயல்படுவது எங்களுடைய கடமை.

25 ஆம் விழாவிற்கு ராஜேந்திர சோழனாக உதயநிதி பற்றிய கேள்விக்கு?

அரசியலுக்கு அப்பாற்பட்டு தன் மகன் சிறப்பாக வர வேண்டும் என்று முதல்வர் நினைக்கலாம் என்னை போல் என் மகன் வரவேண்டும் என்னை விட பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைக்கலாம் இது அதற்கு உவமைய உதாரணம் காட்டுவதற்கு இந்த விதத்தில் குற்றமாக பார்க்கும் என்று சொல்ல முடியாது அவ்ளோ பெரிய ராஜேந்திர சோழன் ராஜராஜ சோழன் அதேபோல் வந்து விடுவார்கள் அப்படின்னு இழிவா சொல்லிவிட்டார்கள் என்று நினைக்க வேண்டாம் எல்லாம் அவரவர்கள் பெருமைக்காக சொல்லுகிற வார்த்தையாகும்.

அண்ணாமலை பற்றிய கேள்விக்கு?

அது உங்கள் பார்வைக்கு தவறாக தெரியலாம் சரியாக தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது சமயத்தில் அவர் லீடு பணி கொண்டு போய் இருக்கலாம் இப்படி ஒரு பிரிவினையோ சிறப்பாக செயல்படவில்லை என்று சொல்ல முடியாது.

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு?

போட்டியிடும் போது நான் உங்களை கூப்பிட்டு எங்கே போட்டு இடுகிறேன் என்று கூறுகிறேன்

கோவை மாணவியின் பாலியல் வழக்கு என்ற கேள்விக்கு?

கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எப்போது ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறார்களோ அவங்களை காலில் சுட்டு விட்டார்கள் ஆனால் நிரூபிக்கப்படும் போது தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

மதுரையை வந்து அசுத்தமான நகரமாக அறிவித்து இருக்கிறார்கள் அதைப் பற்றிய கேள்விக்கு?

என்ன செய்வது என்றால் மதுரையை உடனே சுத்தப்படுத்துவதற்கான பணியில் இறங்குங்கள் எல்லோரும் .

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Hindusthan Samachar / Durai.J