எந்த இளைஞர்களையும் நான் இரவு நேரத்தில் இருட்டான தனி இடத்துக்கு போக சொல்லமாட்டேன் - நடிகை கஸ்தூரி பேட்டி
சென்னை, 8 நவம்பர் (ஹி.ச.) சென்னை கே கே நகரில் நடைபெற்ற பாஜக கலை மற்றும் கலாச்சார பொதுக்குழு கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக எம்பி கனிமொழி, சமூகம் மாற வேண்டும் என்று பேசிய ப
Kastoori


சென்னை, 8 நவம்பர் (ஹி.ச.)

சென்னை கே கே நகரில் நடைபெற்ற பாஜக கலை மற்றும் கலாச்சார பொதுக்குழு கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

திமுக எம்பி கனிமொழி, சமூகம் மாற வேண்டும் என்று பேசிய பேச்சுக்கு,

கனிமொழி அவர்களை ஒரு பெண்ணாக நான் மிகவும் மதிக்கிறேன். ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் எதிர்க்கட்சியாக இருந்தபோது நன்றாக செயல்படுகிறார்கள். ஆனால், ஆட்சியில் இருக்கும்போது எதுவும் செய்வதில்லை.

இளம் வயதில் அதிக விதவைகள் இருப்பதாக கருப்பு சட்டை போட்டுக்கொண்டு நின்றார் ஸ்டாலின். இரும்புக்கரம் துரு பிடித்துப்போய், அதை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

வேங்கைவயல், கிட்னி முறைகேடு, கள்ளக்குறிச்சி மரண வழக்குகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில் எந்த குற்றத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என சொல்கிறீர்கள்.

கோயமுத்தூர் விவகாரத்தில் இளைஞர்களின் செயலை நான் ஊக்குவிக்கமாட்டேன். கோயமுத்தூர் போலீஸ் மீது குறை சொல்லமுடியாது.

எந்த இளைஞர்களையும் நான் இரவு நேரத்தில் இருட்டான தனி இடத்துக்கு போக சொல்லமாட்டேன்.

சமூகம் இந்த தீய திமுக-வை நம்புவதில் இருந்து திருந்த வேண்டும். எனவே சமூகம் மாறவேண்டும் என்ற கனிமொழி அவர்களின் பேச்சை நான் ஏற்கிறேன்.

ஸ்டாலின் அவர்களுக்கு என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. என்ன என்ன என்று கேட்டுவிட்டு, பக்கத்தில் சொல்லிக்கொடுப்பதை சொல்கிறார் என்று பேசினார்.

துரைமுருகன் பேச்சுக்கு பதில் கூறிய கஸ்தூரி,

வயசாகிடுச்சு; வயசானால் நமக்கு கற்பனைகள் சில வரும். இல்யூஷன், டில்யூஷன் இதெல்லாம் வரும். எனவே துரை முருகன் அவர்கள் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம். நகைச்சுவை உணர்வு மிகுந்தவர் என்பதால் அவரது நகைச்சுவையை நான் ரசிக்கிறேன் என கூறினார்.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய கஸ்தூரி,

என் பேச்சு விக்டிமுக்கு எதிராக இருப்பதாக நினைத்தால் பரவாயில்லை. கண்ட கண்ட நேரத்தில் ஊர் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என நான் ஒரு பதின் வயது பெண்ணினுடைய தாய். வேலை கெட்ட நேரத்தில் ஊர் சுத்த கூடாது என்று கொஞ்சம் பொது அறிவோடு செயல்படுவேன்.

பெண்கள் மட்டுமல்ல ஆணும் கூட செல்லக்கூடாது. இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை, இது சிங்கப்பூர் கிடையாது. எத்தனையோ பெற்றோர்கள் வாயை கட்டி வயிற்றை கட்டி படிக்க அனுப்புகின்றனர். படிக்க அனுப்பினால் நீங்கள் செய்வது என்ன. அது பெண்ணியத்திற்கு எதிரானது என்றால் அது பெண்ணியமே கிடையாது.

சுதந்திரம் என்றால் இந்தியா உலகக் கோப்பை வெற்றி பெற்றிருப்பதை போல நீங்களும் வென்று காட்டுங்கள், கையே இல்லாத பெண் வில்வித்தையில் பதக்கம் வெல்வது போல காட்டுங்கள், சமூக சேவை செய்யுங்கள், ஆசிரியர் ஆகங்கள்.

ஆனால் நடுராத்திரியில் காரில் உட்கார்ந்திருப்பது தான் சுதந்திரமா? பேச்சுவார்த்தை நடத்தியே ஆகவேண்டும் என்றால், அவ்வளவு அவசரம் என்றால், பேச்சுவார்த்தையை தான் சொல்கிறேன் என அவர் பேசினார்.

தொடர்ந்து நடிகை கௌரி கிஷன் விவகாரம் குறித்து பேசிய கஸ்தூரி,

கௌரி கிஷன், இந்த சின்ன வயதில் பல காலமாக யாரும் கேட்காத ஒன்றை தப்பு என்று போட்டு உடைத்துள்ளது. தன்னுடைய கரியர் பாதிக்கும் என்பதை தாண்டி அறம் பாதிக்கும் என்று பெண்ணியத்தை காட்டி இருக்கிறார்.

கௌரி கிஷன் பெயர் வெளியே தெரியும் அளவிற்கு அந்த youtuber பெயரை யாருமே வெளியே சொல்ல மாட்டார்கள். என்னுடைய சினிமா அனுபவத்தில் நான் பல பத்திரிகைகளை படித்திருக்கிறேன், இதுபோல நாகரிகம் அற்ற கேள்விகளை யாரும் கேட்டதில்லை.

நான் ஆர் எஸ் கார்த்திக்கிடம் ஓபனாக சவால் விடுகிறேன். என்னுடன் டிரம்ப், மோடி குறித்து விசாரிக்க முடியுமா? என்று ஆதங்கமாக பேசினார்.

Hindusthan Samachar / P YUVARAJ