திமுக செய்த துரோகத்திற்கு மாற்றுத் திறனாளிகள் சட்டமன்றத் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் - அன்புமணி ராமதாஸ்
சென்னை, 8 நவம்பர் (ஹி.ச) மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நிலைப்பு கிடையாதா? வாய்கிழிய வசனம் பேசி நடைமுறையில் துரோகம் செய்யும் திமுக என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்ட
Anbumani


சென்னை, 8 நவம்பர் (ஹி.ச)

மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நிலைப்பு

கிடையாதா? வாய்கிழிய வசனம் பேசி

நடைமுறையில் துரோகம் செய்யும் திமுக என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது ,

தமிழ்நாடு அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு பணிநிலைப்பு வழங்குவதற்கான வாய்ப்புகளையும், அவர்களுக்காக சிறப்பு ஆள்தேர்வு முகாம் நடத்துவதற்கான வசதியையும் ஒற்றை அரசாணையின் மூலம் திமுக அரசு பறித்திருக்கிறது. மாற்றுத் திறனாளிகளின் பாதுகாவலராக தங்களை சித்தரித்துக் கொள்ளும் திமுக, அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களுக்கு நன்மை செய்யாமல் தீங்கிழைப்பது கண்டிக்கத்தக்கது.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த அக்டோபர் 30&ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கும் 24 என்ற எண் கொண்ட அரசாணையின் மூலம் அரசு பணிகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடைபெறவிருக்கும் போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில், ஏற்கனவே அரசுத் துறைகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதிகாண் மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எழுத்துத் தேர்வுகள் அல்லது நேர்காணல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களின் போது, அதில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளின் அரசுத் துறை தற்காலிக பணி அனுபவம் 2 முதல் 10 ஆண்டுகள் வரை இருந்தால் 5 மதிப்பெண்களும், 11&15 ஆண்டுகளாக இருந்தால் 8 மதிப்பெண்களும், 16 ஆண்டுகளுக்கும் கூடுதலாக இருந்தால் 10 மதிப்பெண்களும் தகுதி காண் மதிப்பெண்களாக வழங்கப்படும். போட்டித் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களுடன் கூடுதலாக இந்த மதிப்பெண்கள் வழங்கப்படுவதால் மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்பது தான் இந்த அர்சாணையின் நோக்கம் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலோட்டமாக பார்க்கும் போது இந்த அரசாணை மாற்றுத்திறன் பணியாளர்களுக்கு நன்மை செய்வதைப் போலத் தோன்றினாலும் உண்மையில் இது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த உரிமைகளை பறிக்கிறது. கடந்த 2008&ஆம் ஆண்டு அக்டோபர் 16&ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் அரசாணை எண் 151&இன்படி தமிழக அரசுத் துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்கப் பட வேண்டும். அதேபோல், கடந்த 2023&ஆம் ஆண்டு இதே துறை சார்பில் வெளியிடப்பட்ட 20&ஆம் எண் கொண்ட அரசாணையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க சிறப்பு ஆள் தேர்வுகளை நடத்த முடியும். ஆனால், இப்போது திமுக அரசு பிறப்பித்திருக்கும் புதிய அரசாணையின் மூலம் கடந்த 2008, 2023&ஆம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் முடக்கப்பட்டிருக்கின்றன.

இதன்மூலம் தற்காலிகமாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நிலைப்பு வழங்க முடியாது. அவர்கள் அனைவரும் பொதுவான ஆள்தேர்வு நடைமுறைகளில் மற்ற பிரிவினருடன் போட்டிட்டு தான் அரசு பணிகளில் சேர முடியும். அரசுத் துறைகளில் 1077 மாற்றுத் திறனாளிகள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 20 ஆண்டுகளைக் கடந்தும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீண்டும் போட்டித் தேர்வு எழுதி இன்றைய இளம் தலைமுறையினருடன் போட்டியிட்டு அரசு பணிகளில் சேருவதற்கு வாய்ப்பே இல்லை. புதிதாக வெளியிட்ட அரசாணையின் மூலம் மாற்றுத் திறன் தற்காலிக ஊழியர்கள் பணி நிலைப்பு பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் திமுக அரசு அடைத்திருக்கிறது.

மாற்றுத் திறனாளிகளின் ஒற்றை பாதுகாவலர்கள் தாங்கள் தான் என பல ஆண்டுகளாக திமுக பெருமை பேசி வருகிறது. உடல் ஊனமுற்றவர்களை அவ்வாறு அழைக்கக்கூடாது என்பதற்காக அவர்களை மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்க அரசாணை பிறப்பித்ததே திமுக அரசு தான் என்று கலைஞர் காலத்திலிருந்து திமுக மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. ஆனால், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக திமுக செய்தது என்னவென்றால் அடுக்கடுக்கான துரோகத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

மாற்றுத் திறனாளி பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதற்கான அரசாணை 151 கலைஞர் ஆட்சிக் காலத்தில் கடந்த 2008&ஆம் ஆண்டே பிறப்பிக்கப்பட்டு விட்டது. அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு சுமார் 3 ஆண்டுகள் திமுக தான் ஆட்சியில் இருந்தது. உண்மையாகவே மாற்றுத்திறனாளிகள் நலனில் திமுகவுக்கு அக்கறை இருந்திருந்தால், அப்போதே அரசாணை எண் 151&ஐ நடைமுறைப்படுத்தி இருக்கலாம். அவ்வாறு நடைமுறைப்படுத்தியிருந்தால் மாற்றுத்திறன் கொண்ட தற்காலிக பணியாளர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே பணி நிலைப்பு கிடைத்திருக்கும். அதன்பின் 2021&ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்து 56 மாதங்கள் நிறைவடையப் போகின்றன. இந்தக் காலத்தில் அரசாணை எண் 151&ஐ செயல்படுத்தும்படி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் பல முறை கோரிக்கை விடுத்தும் அதற்காக திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அதுமட்டுமின்றி, இனி எந்தக் காலத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நிலைப்பு கிடைக்காத அளவுக்கு தடைச்சுவரை திமுக எழுப்பியுள்ளது. இதை விட மிக மோசமான சமூக அநீதியை மாற்றுத்திறனாளிகளிக்கு இழைக்க முடியாது.

துரோகங்களை இழைப்பதில் மட்டும் தான் திமுக சமநிலையை கடைபிடித்து வருகிறது.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எத்தகைய துரோகங்களை செய்ததோ, அதே துரோகங்களைத் தான் மாற்றுத் திறனாளிகளுக்கும் திமுக செய்திருக்கிறது. இந்த துரோகத்திற்கு மாற்றுத் திறனாளிகள் சட்டமன்றத் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.

அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் மாற்றுத் திறன் கொண்ட தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ