சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, 8 நவம்பர் (ஹி.ச.) கடந்த சில நாட்களாகவே சென்னையில் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்கள், தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுச்சேரியில
சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை, 8 நவம்பர் (ஹி.ச.)

கடந்த சில நாட்களாகவே சென்னையில் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்கள், தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுச்சேரியில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகை, புதுச்சேரி முதல்வர் இல்லம், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடு, சென்னை உயர்நீதிமன்ற வளாகம், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் உள்ள சுங்க தலைமை அலுவலகம், அண்ணா அறிவாலயத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இன்று (நவ 08) காலை இ - மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் சென்னையில் உள்ள ஜப்பான், மொரிசியல் உள்ளிட்ட 37 வெளிநாட்டு தூதரகங்களுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் புரளி எனத் தெரிய வந்தது. அதே சமயம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள 37 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b